25.11.07

எல்லோருக்கும் வணக்கங்கண்ணா...

சரி வந்தாச்சு.. ஆரம்பிச்சாச்சு.. என்ன எழுதுறது? யோசிச்சுப் பார்த்தா எதை எழுதினாலும் நல்லதோ,கெட்டதோ படிச்சுட்டு திட்டறதுக்கு நீங்க எல்லாரும் இருக்கிங்க.ஒரு தடவை கல்லூரி நாட்களில் சும்மா விளையாட்டுக்கு ஒரு கைரேகை ஜோசியரிடம் கையைக் காட்டப்போக அவரோ தம்பி.. நீங்க பிற்காலத்தில் பெரிய எழுத்தாளரா வருவிங்க... என்று பிட்டைப்போட இதோ இங்கே அதற்கான முதல்படி எடுத்து வைத்தாயிற்று... ஆகையால் திட்டனும்னு நினைச்சிங்கனா ஒரு எக்ஸ்ட்ரா காப்பி போட்டு அந்த மருதமலை கைரேகை ஜோசியருக்கு ஒன்று அனுப்பிடுங்க.. சரியா?
இதோ 25 வயசாயிடுச்சு.இதுவரைக்கும் யோசிச்சுப் பார்த்தா சாதனைன்னு சொல்லிக்கிற அளவுக்கு ஒன்றுமே செய்யவில்லை.சரி எதையாவது எழுதனுமே என்ன செய்யலாம்? சரி இந்த 25 வருட வாழ்க்கையின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வோமே.கூடவே படித்தது,பிடித்தது எல்லாவற்றையும் சேர்த்துக்கொள்வோம் சரியா...
நான் ஒன்றும் விலாவரியாக ஆதாரங்களுடன் எடுத்துக்கூற "ஆனந்தவிகடன் மதனோ", ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதி(கிறுக்கி) கவிதையென கைதட்டி ரசிக்கவைக்கும் "பார்த்திபனோ" கிடையாது.ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.என்னால் முடிந்தவரையில் தெளிவான நடையில் எழுத முயற்சிக்கிறேன்.
சில நேரங்களில் இதையெல்லாம் பார்க்கும்பொழுது சிரிப்பாகவும் அட பைத்தியக்காரத்தனமாகவும் கூடத் தோன்றுகிறது.நான் ஏன் இப்படி எதையாவது எழுதிக்(கிறுக்கிக்)கொண்டேஇருக்கிறேனென்று? எனக்கே இப்படியெல்லாம் தோன்றும்பொழுது உங்களுக்கு...???????
இதுவரையில் என்வாழ்வில் நான் சந்தித்த நிகழ்வுகளை தனிமையில் அமர்ந்து எழுதி உங்களுடன் பகிர்ந்துக் கொள்வதன் மூலம் நான் சற்று இளைப்பாறுகிறேன்.என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்.ஏதோ அரிப்புக்கு "Itch Guard" கிடைத்தது போல... என்ன சரிதானே?
பின்குறிப்பு: அட சொல்ல மறந்துவிட்ட இன்னொரு முக்கியமான விஷயம்.ரொம்ப நாளாகவே ஒரு வலைப்பூ சொந்தமாக ஆரம்பித்து எல்லோரையும் இம்சைப்படுத்த வேண்டும் என்று ஆசையிருந்தாலும் கூட சோம்பேறித்தனத்தால் அது தள்ளிப்போய்க் கொண்டேயிருந்தது.
இதோ இன்று பணி நிமித்தமாக ஆந்திராவின் ஐதராபாத்தில் வந்து ஒரு ஆண்கள் விடுதியில் செட்டில் ஆயாச்சு.என் ரூம்-மேட்டாக இருக்கும் ஆந்திர நண்பர் ஒருவரே இந்த வலைப்பூவை இவ்வளவு சீக்கிரம் ஆரம்பித்து தினமும் பதிவுகள் பதிவதற்கு முக்கிய காரணம்.அந்த காமெடியை அடுத்த பதிவில் சொல்கிறேனே..

No comments: