25.11.07

எல்லோருக்கும் வணக்கங்கண்ணா...

இப்போ கொஞ்ச நாளாகத்தான் நமக்கு இந்த வலைப்பூ அறிமுகம்.சில நாட்களுக்கு முன் பொழுதுபோகாமல் கூக்லி நண்பரை சீண்டிபார்க்க ஆசைப்பட்டு தமிழ் மின் புத்தகங்களைக் குறித்துப் துருவிதுருவி பல கேள்விகள் கேட்க அவரோ மனம் வெறுத்து இந்தா நண்பா.. இதை வைச்சுக்கோ. என தமிழ்மணம்,தேன்கூடு முகவரிகளை தந்தார்.(என்னிடம் ரகசியமாய் நண்பா இதை வைத்துதான் நான் இவ்வளவு நாளா வண்டி ஓட்டிகிட்டிருக்கேன்.உன் கேள்விக்கான பதிலெல்லாம் அதில்தான் இருக்கு.. வெளியில் யாரிடமும் சொல்லி பிழைப்பைக் கெடுத்துடாதே நண்பா.. என்றவாறே காலில் விழுந்துக் கும்பிட்டு ஓடோ டிப் போய்விட்டார்.)இப்படிதாங்க எனக்கு வலைப்பூ அறிமுகம்.இங்கே முதன்முதலில் வந்தேன். ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது.என்னமா கலக்கறீங்க...

முதல் பார்வையில் பெரும்பாலும் வெளிநாட்டுவாழ் இந்தியரும்,இங்கிருந்து பணி நிமித்தமாக சென்றோரும் தாய்நாட்டை பிரிந்த சோகத்தில் தமிழில் எழுதுகிறீர்கள் என நினைத்திருந்தேன். என் நினைப்பை பொய்யாக்கும் விதமாக இந்தியாவிலிருந்து பல எழுத்தாளர்களின் வலைப்பக்கங்கள்.முக்கியமாக எங்கள் ஊர்க்காரர் சிபி அண்ணன்(யாராவது அவர் காதிலே போட்டு வையுங்கண்ணா.. ஊர்க்காரப் பய ஒருத்தன் புதுசா வந்திருக்கான்னு..) இருப்பதை பார்த்ததும் ரொம்பவே சந்தோஷம்.

நமக்கு சின்ன வயசுல இருந்தே ஏதாவது எழுதறுன்னா ரொம்ப இஷ்டம்.அப்பப்போ மனசுல உதிக்கறதையெல்லாம் எதிலாவது கிறுக்கிகிட்டே இருப்பேன்.ஆனால் வெளியே யார்கிட்டயும் காட்டமாட்டேன்.ஏனென்றால் எதையாவது சொல்லி வளரும் அரும்பை முளையிலேயே கிள்ளிவிட்டுட்டாங்கன்னா என்ன பண்றது? அப்படிங்கற பயம்தான். இருந்தபோதிலும் கல்லூரி வந்தவுடன் ஒருசில நெருங்கிய நண்பர்களிடம் காட்டி மகிழ்ந்ததுண்டு.

சரி வந்தாச்சு.. ஆரம்பிச்சாச்சு.. என்ன எழுதுறது? யோசிச்சுப் பார்த்தா எதை எழுதினாலும் படிக்கறதுக்கு நீங்க எல்லாரும் இருக்கிங்க.ஒரு தடவை கல்லூரி நாட்களில் சும்மா விளையாட்டுக்கு ஒரு கைரேகை ஜோசியரிடம் கையைக் காட்டப்போக அவரோ தம்பி.. நீங்க பிற்காலத்தில் பெரிய எழுத்தாளரா வருவிங்க... என்று பிட்டைப்போட இதோ இங்கே அதற்கான முதல்படி எடுத்து வைத்தாயிற்று...

பெரியதலைகள் எல்லாம் கொஞ்சம் இந்த தம்பியைப் பார்த்து தட்டிக்கொடுத்து கவனிச்சுக்குங்க. எழுதியதை படித்துவிட்டு பரவாயில்லைன்னு நினைச்சிங்கன்னா நாலு பேர்கிட்ட சொல்லி அப்படியே வந்து ஒரு பார்வை பார்த்துட்டு போகச் சொல்லுங்க.

No comments: